சுனைனா நடிக்கும் 4 மொழிப் படத்தின் புதிய அப்டேட்!
நடிகை சுனைனா நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெஜினா’ படத்தின் முதல் பாடலின் ப்ரோமா வெளியாகியுள்ளது.
2008இல் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சுனைனா. தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஷாலின் லத்தி படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் 2022, டிச.22இல் வெளியாகியது. கலவையான விமர்சனங்கள் வந்தது.
நேரம், பிரேமம் படத்தில் துணைக் கதாபாத்திரமாக நடித்த அனந்த் நாக் உடன் சுனைனா நடித்துள்ளார். நிவாஸ் ஆதித்தன், விவேக் பிரசன்னா, பவா செல்லதுரை உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
சதிஷ் நாயர் தயாரித்துள்ள இந்தப் படத்தினை இயக்குகிறார் டோமின் டி செல்வா. யுகபராதி எழுதிய ‘சூராவளிப் போல’ எனும் இந்தப் பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். தயாரிப்பாளரான சதிஷ் நாயர் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பான் இந்தியப் படமாக ரிலீஸாக உள்ளது.
Advertisement
இந்தப் படத்தின் முதல் பாடலான ‘சூராவளிப் போல’ பாடலின் ப்ரோமாவும் 4 மொழிகளில் வெளியாகியுள்ளது. ஜனவரி 7ஆம் தேதி முழுமையான பாடலும் வெளியாக உள்ளது.