முகப்பு
செய்திகள்

தனுஷ் படத்தில் நடிக்கவில்லை: பிரபல நடிகர்

நடிகர் தனுஷின் 50-வது படத்தில் தான் நடிக்கவில்லை என பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:00 PM
பகிர்:

நடிகர் தனுஷின் 50-வது படத்தில் தான் நடிக்கவில்லை என பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தன் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கவுள்ளார். சில வாரங்களுக்கு முன்பு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

Advertisement

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும், முக்கிய கதாபாத்திரங்களில் எஸ்.ஜே.சூர்யா, சுதிப் கிஷன், விஷ்ணு விஷால் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இப்படத்தில் தான் நடிக்கவில்லை என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டரில், ‘துரதிஷ்டவசமாக நான் அந்தப் படத்தில் நடிப்பதாக கூறும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. என்னுடைய மற்ற படங்களினால், விருப்பம் இருந்தும்  இந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், வடசென்னையை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, தனுஷ் பா.பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments