முகப்பு
செய்திகள்

தொடர் தோல்விகள்.. கவலையில் கங்கனா!

நடிகை கங்கனா ராணவத் நடிப்பில் வெளியான படங்கள் தொடர் தோல்வியைச் சந்தித்து வருகின்றன.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:18 AM
பகிர்:

தமிழில் தாம்தூம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை கங்கனா ரணாவத். ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சிறந்த நடிப்பிற்காக 2 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கைவை மையமாக வைத்து ’எமர்ஜென்சி’ படத்தினை தானே தயாரித்து இயக்கி நடித்துள்ளார். இந்தப் படம் நவ.24 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

இந்நிலையில், சமீபத்தில் கங்கனா நடிப்பில் வெளியான தேஜஸ் திரைப்படம் கடுமையான தோல்வியைச் சந்தித்துள்ளது. ரூ.60 கோடியில் தயாரான இப்படம் முதல் வாரத்தில் ரூ.5.5 கோடியை மட்டுமே வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக கங்கனா நடிப்பில் திரைக்கு வந்த சந்திரமுகி - 2, தாக்கட், பங்கா, ஜட்ஜ்மென்டல் ஹே கியா, சிம்ரன், ரங்கூன், கட்டி பட்டி, ஐ லவ் நியூயார்க் ஆகிய படங்களும் தோல்விப்படமாக அமைந்தன. இதனால், கங்கனா கவலையில் இருக்கிறாராம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.