சென்னை திரும்பினார் நடிகர் விஜய்!
வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்துவரும் நடிகர் விஜய் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பினார்.
லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க: ஏமாற்றி வெல்லும் ஹீரோக்கள்! கார்த்திக் சுப்புராஜின் தந்திரம்?
இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருள்செலவில் தயாரிக்கிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: இறுதிக் கட்ட படப்பிடிப்பில் விஜய் சேதுபதி 51!
தாய்லாந்தில் வெங்கட்பிரபு பிறந்தநாளுக்கு முன்பாக முக்கியமான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டதாக தயாரிப்பாளர் கூறியிருந்தார்.
இந்நிலையில் படப்பிடிப்பை முடித்து சென்னை வந்த நடிகர் விஜய்யின் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.