இதற்குமேல் எனக்கு என்ன வேண்டும்: நயன்தாராவின் நெகிழ்ச்சி பதிவு!
நடிகை நயன்தாரா தனது பிறந்த நாளை முன்னிட்டு நெகிழ்ச்சியான பதிவினை பதிவிட்டுள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களில் பிசியாக நடித்து வந்த நயன்தாரா, முதல்முறையாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் 1140 கோடி வசூலித்தது.
இதைத் தொடர்ந்து, ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்த இறைவனும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. தற்போது அன்னபூரணி படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: கறுப்பாக இருந்தால் அழகில்லையா?: கார்த்திக் சுப்புராஜ் ஆவேசம்!
Advertisement
Advertisement
இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினர், வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று பெற்றோர்களாகவும் இருக்கின்றனர்.
இதையும் படிக்க: கப்பை தூக்குறோம்: தமிழில் பேசி அசத்திய ஜடேஜாவின் வைரல் விடியோ!
அவர்களது குழந்தைகளுக்கு உயிர், உலக் என வித்தியாசமாக பெயரிட்டுள்ளார்கள். நயன்தாராவின் 39வது பிறந்தநாளில் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதையும் படிக்க: லியோ: பாடல் வரிகள் நீக்காமல் வெளியானது ‘நான் ரெடிதான்’ விடியோ!
இந்நிலையில் நடிகை நயன்தாரா குடும்பத்துடன் இருக்கும் விடியோவை பகிர்ந்து, “இதற்குமேல் எனக்கு என்ன வேண்டும். இந்த 3 ஆண்களுடன் கடவுள் என்னை ஆசிர்வதித்துள்ளார். என்னுடைய உயிர், உலக், விக்னேஷ் சிவன் உங்களை காதலிக்கிறேன்” என ரத்தமாரே பாடலுடன் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.