லோகேஷ் கனகராஜ் - விஜய் குமார் கூட்டணியில் தயாராகும் ‘ஃபைட் கிளப்’!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பின் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது, லோகேஷ் நடிகர் ரஜினிகாந்த்தின் ‘தலைவர் 171’ படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே, லோகேஷ் கனகராஜ் ஜி-ஸ்குவாட் (G-squad) என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் படங்களை தயாரிக்கவுள்ளதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், உறியடி விஜய் குமார் படத்தினை தனது முதல் படமாக அறிவித்துள்ளார். இப்படத்திற்கு ‘ஃபைட் கிளப்’ எனப் பெயரிட்டுள்ளனர். அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
Advertisement
இதையும் படிக்க: த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை: மன்சூர் அலிகான்
நடிகரும் இயக்குநருமான உறியடி விஜய் குமார், லோகேஷ் கனகராஜ்ஜின் நீண்ட நாள் நண்பர். உறியடி படத்தின் மூலம் கவனம் பெற்ற விஜய்குமார் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் வசனம் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.