முகப்பு
செய்திகள்

ஓடிடியில் மார்க் ஆண்டனி!

மார்க் ஆண்டனி திரைப்படம் ஓடிடியில் வெளியானது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:08 AM
பகிர்:

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மேலும் படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வினோத்குமார் தயாரித்துள்ளார். டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. 

செப்.15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி இதுவரை உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், மார்க் ஆண்டனி திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.