முகப்பு
செய்திகள்

சந்திரமுகி - 2 வெளியீட்டுத் தேதியில் மாற்றம்?

சந்திரமுகி - 2  திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை மாற்ற தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 18 அக்டோபர், 2023 at 2:24 PM
பகிர்:

கடந்த 2005-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு பெரும் வெற்றி பெற்றதோடு மிக அதிகமான வசூலையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.  

லைகா புரடக்ஷன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி - 2 படத்திற்கு ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை - தோட்டா தரணி.  மேலும், கங்கனா ரணாவத், ராதிகா, ஸ்ருஷ்டி, நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. மேலும், இப்படம் வருகிற விநாயகர் சதுர்த்தியை(செப்.15) முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது. 

Advertisement

இதையும் படிக்க: லால் சலாம் டப்பிங் பணிகளில் ரஜினி!

இந்நிலையில், இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை செப்.28 ஆம் தேதிக்கு மாற்ற தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செப்.15 வெளியாகும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால் படக்குழு இம்முடிவை எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.