முகப்பு
செய்திகள்

ராஷ்மிகா மந்தனா பிறந்த நாள்: புஷ்பா - 2 புதிய போஸ்டர்

ராஷ்மிகா மந்தனாவின் புஷ்பா - 2 படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Updated On : 5 ஏப்ரல் 2024, 11:28 am IST
பகிர்:

இயக்குநர் சுகுமார் இயக்கிய அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2021-ல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் சமந்தாவின் 'ஊ சொல்றியா மாமா' பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது.

தற்போது, புஷ்பா - 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர்.

Advertisement

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் டீசரை வருகிற ஏப்.8 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புஷ்பா - 2 வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்த நாளை முன்னிட்டு புஷ்பா - 2 படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்தில் ஸ்ரீவல்லி பாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.