செய்திகள்

இந்தியன் - 2 வெளியீடு அறிவிப்பு!

நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் - 2 திரைப்படத்தின் வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். இதில், கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். 

லைகா பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தியன் - 2  அறிமுக விடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து, சென்னை செம்மஞ்சேரி, கண்ணகி நகர் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புச் சுவர்களில் இந்தியன் - 2 கமல்ஹாசனின் ஓவியங்கள் வரையப்பட்டு புரோமோஷனைத் துவங்கினர்.

இந்நிலையில், இப்படத்தை ஜூன் மாதம் வெளியிடுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிபி இல்லாமலே வாட்ஸ்அப் ஹேக் செய்யப்படுகிறதாம்..! எச்சரிக்கை!

தவெக நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் நீக்கம்

ஹாப்பி ராஜ் - ப்ரோமோ!

ஹாப்பி ராஜ் புரோமோ!

வியப்பில் ஆழ்த்திய கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி முன்னோட்டம்!

SCROLL FOR NEXT