செய்திகள்

கோட் படத்தின் புதிய போஸ்டர் காப்பியடிக்கப்பட்டதா?

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் கோட் படத்தின் போஸ்டர் காப்பியடிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

DIN

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

படக்குழு வெளியிட்ட போஸ்டர்

புதுச்சேரி, கேரளத்தில் படத்தின் படப்பிடிப்பு நிகழ்ந்தபோது தன் ரசிகர்களை விஜய் சந்தித்து எடுத்துக்கொண்ட விடியோ இணையத்தில் வைரலானது. தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இன்று மதியம் புதிய போஸ்டர் வெளியாகியது. அதில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

ஜே பிரிண்ட்ஸ் வெளியிட்ட போஸ்டர்

ஜே பிரிண்ட்ஸ் (ஜதுர்சன் பிரபாகரன்) எனும் புகைப்பட கலைஞர் , ஏஐ கலைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு பிரபலங்களின் படங்களுக்கு ஏஐ உதவியுடன் புதிய போஸ்டர்களை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் அவர் உருவாக்கிய கோட் படத்தின் போஸ்டரைப் பகிர்ந்து, “2023ஆம் ஆண்டு ஜூனில் தளபதி 68 படத்தின் போஸ்டரை நான் தயாரித்து இருந்தேன். இதனை எனது நண்பர் உதவியுடன் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் அப்போது காட்டியிருந்தேன். தற்போது ஏப்.2024இல் அதிகாரபூர்வமாக கோட் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் போஸ்டர் எனது படைப்பை வைத்து உருவாக்கியது போல் இருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்த போஸ்டர் எனது படைப்பைப் போல் இருக்கிறதா? வெங்கட் பிரபு என்ன சொல்கிறார் என்று பார்போம்” என்று வெங்கட் பிரவுவை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடவுளை முட்டாளாக்க முடியாது! ரவி மோகனைச் சாடும் ஆர்த்தி?

ஈரானுடன் உறவை முறித்த ஆஸ்திரேலியா! தூதர் வெளியேற உத்தரவு!

காதலே காதலே... ஐஸ்வர்யா லட்சுமி!

நொய்டா வரதட்சிணை கொலையில் திடீர் திருப்பம்: நிக்கியின் கணவர் மீது ஏற்கனவே வழக்கு!

4 ஆண்டு தடைக்குப் பின்... ஒருநாள் அணிக்குத் திரும்பும் ஜிம்பாப்வே ஜாம்பவான்!

SCROLL FOR NEXT