முகப்பு
செய்திகள்

லோகேஷ் கனகராஜின் புதிய பட அறிவிப்பு!

லோகேஷ் கனகராஜின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 14 ஏப்ரல், 2024 at 8:05 AM
லோகேஷ் கனகராஜ்
பகிர்:

ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

இயக்குநர் லோகேஷ் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமானது.

தற்போது, லோகேஷ் கனகராஜ் ‘தலைவர் 171’ படத்திற்கான திரைக்கதை வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் ஜி ஸ்குவாட் நிறுவனம் சார்பில் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்துக்கு ‘பென்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ரெமோ, சுல்தான் படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம், ஃபேஷன் ஸ்டுடியோஸ், தி ரூட் ஆகீய நிறுவனங்களுடன் இணைந்து பென்ஸ் திரைப்படத்தை தயாரிக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →