காதலர் நாளில் வெளியாகும் டிசி படத்தின் கிளிம்ஸ் விடியோ!
டிசி படத்தின் கிளிம்ஸ் விடியோ குறித்து....
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகும் டிசி படத்தின் கிளிம்ஸ் விடியோ குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் புதிய படத்தில் லோகேஷ் கனகராஜ், நடிகராக அறிமுகமாகிறார். இந்தப் படத்துக்கு டிசி (DC) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இப்படம் முழு ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படம் கோடை வெளியீடாகத் திரைக்கு வரும் என்று டிசி படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
டிசி படத்தில், தேவதாஸ் என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜும், சந்திராவாக வாமிகா கபியும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், டிசி படத்தின் கிளிம்ஸ் விடியோ காதலர் நாளில் பிப். 14 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The teaser video of director Lokesh Kanagaraj's upcoming film DC has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.