முகப்பு
செய்திகள்

ராயன் படத்தின் முதல் பாடல் வெளியீடு எப்போது?

ராயன் படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என்ற தகவலை படக்குழு அறிவித்துள்ளது.

Updated On : 14 ஏப்ரல், 2024 at 10:58 AM
பகிர்:

தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பல துறைகளில் அழுத்தமான தடங்களைப் பதித்தவர் நடிகர் தனுஷ். 2016-ல் அவரது இயக்கத்தில் வெளியான பா. பாண்டி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அந்த வெற்றிக்குப்பின் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் நடிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்திய தனுஷ், தற்போது மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். தனது 50ஆவது படத்தை அவரே எழுதி, இயக்கி, நடித்துள்ளார்.

கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு "ராயன்" எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ள செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், நடிகை துஷாரா விஜயன், நடிகை அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் ஆகியோரின் தோற்றப் போஸ்டர்கள் வெளியானது.

இந்நிலையில், ராயன் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்று தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து படக்குழு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.