செய்திகள்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.

DIN

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் தொடர் இந்த வார இறுதியில் நிறைவடைகிறது. இந்த தொடர் கடந்த ஜூலை 12, 2021 முதல் ஒளிப்பரப்பாகி வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தமிழும் சரஸ்வதியும் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் நிறைவடையவுள்ளதால், மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த மோதலும் காதலும் தொடர் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்கும் நடிகர் திரவியத்தின் புதிய சீரியலான வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரில், நடிகர் திரவியமிற்கு ஜோடியாக ஸ்ரீதா சிவதாஸ் நடிக்கிறார். மேலும், இத்தொடரில் பாரதி கண்ணம்மா தொடரில் அகிலன் பாத்திரத்தில் நடித்த சுதிஷ், அவினாஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள்.

இத்தொடரில் வில்லியாக பாண்டவர் இல்லம் தொடரில் மல்லிகா பாத்திரத்தில் நடித்த நடிகை ஆர்த்தி நடிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த படம் தனுஷுடன்தான்: மாரி செல்வராஜ்

பங்குச்சந்தை முதலீடு: அதிக லாபம் என்று சொன்னாலே நம்ப வேண்டாம்!!

மெஸ்ஸி மேஜிக், ஜோர்டி ஆல்பா ஓய்வு: இன்டர் மியாமி அபார வெற்றி!

உலகத்தரத்தில் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம்: முதல்வர் ஸ்டாலின்

பாலைவனம், சூரிய அஸ்தமனம், அமைதி... இனாயா சுல்தானா!

SCROLL FOR NEXT