கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?
நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகை மேனகா மற்றும் மலையாள தயாரிப்பாளர் சுரேஷின் மகள் ஆவார்.
தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவந்த கீர்த்தி சுரேஷுக்கு, மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 'மகாநதி' திருப்புமுனையாக அமைந்தது.
தற்போது, பேபி ஜான் படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகிறார்.
Advertisement
Advertisement
இதற்கிடையே, கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து அடிக்கடி வதந்திகள் வருவது வழக்கம். இவருக்கும், கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகவல் வெளியானது. ஆனால் அதை கீர்த்தி சுரேஷ் மறுத்தார்.
இப்போது, மீண்டும் அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தன் நீண்டகாலக் காதலரை அவர் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல். ஆனால், உண்மை என்ன என்பதை கீர்த்தி சுரேஷ் சொன்னால்தான் உண்டு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.