முகப்பு
செய்திகள்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி

Updated On : 24 ஏப்ரல் 2024, 11:26 am IST
பகிர்:

புதுச்சேரி: திரைப்பட இயக்குநர் ஹரி புதுச்சேரி நகரப்பகுதியில் வீதி வீதியாக சென்று 26-ம் தேதி வெளியாகவுள்ள ரத்னம் திரைப்படம் பார்க்க அனைவரும் தியேட்டருக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த ரத்னம் திரைப்படம் வருகிற 26 ஆம் தேதி நாடு முழுவதும் வெளியாக உள்ளது. அதேபோன்று புதுச்சேரியிலும் ரத்னம் திரைப்படம் வெளியாகிறது. இந்த நிலையில் ரத்னம் திரைப்படம் வெளியாக உள்ள புதுச்சேரி சண்முகா திரையரங்கிற்கு வந்த இயக்குநர் ஹரி, விஷால் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்பொழுது நடிகர் விஷாலுக்கு மூன்றாவது திரைப்படமாக இந்த படத்தை இயக்கி உள்ளதாகவும் மிகப்பெரிய வெற்றியை இந்த திரைப்படம் ஏற்படுத்திக் கொடுக்கும். எனவே அனைவரும் திரையரங்கில் வந்து பார்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Advertisement

Advertisement

தொடர்ந்து தியேட்டரில் குழுமி இருந்த விஷால் ரசிகர்கள் இயக்குனரிடம் செல்பி எடுத்தும் போட்டோ எடுத்தும் மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து புதுச்சேரி நகரப் பகுதிக்கு வந்த இயக்குனர் ஹரி, நேரு வீதி, பாரதி வீதி, மகா மகாத்மா காந்தி வீதி, குபேர் அங்காடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்கிருந்த பூ வியாபாரி, பழ வியாபாரி, காய்கறி வியாபாரி, மற்றும் ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்ட பொதுமக்களிடம் 26-ம் தேதி வெளியாகவுள்ள விஷால் நடித்த ரத்னம் திரைப்படத்தை அனைவரும் திரையரங்கில் வந்து பார்க்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார் மேலும் அவருக்கு வியாபாரிகளும் வரவேற்பும் அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.