செய்திகள்

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

DIN

இயக்குநர் ஹரி இயக்கத்தில் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சௌத் இணைந்து தயாரிக்கும் படத்தில் நாயகனாக விஷால் ரத்னம் படத்தில் நடித்துள்ளார்.

‘மார்க் ஆண்டனி’  படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷால் நடித்துள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

நடிகர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.

தாமிரபரணி, பூஜை படங்களுக்குப் பிறகு விஷால் - ஹரி இருவரும் இணையும் மூன்றாவது படம் இது. பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் இன்று ரத்னம் வெளியானது.

இந்நிலையில் இயக்குநர் ஹரி பேசிய விடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

இயக்குநர் ஹரி பேசியதாவது:

நான் எங்கேயும் என்னை முழு நேரப் படைப்பாளி என அடையாளப்படுத்தியது கிடையாது. நான் செமி (பாதி) - கிரியேட்டர்தான். பாதி என்னுடைய படைப்பு. மீதி எல்லாமே சமாளிபிக்கேஷன்தான். நல்ல நடிகர், நடிகை, காமெடியனை வைத்து செய்வதுதான் அந்த சமாளிபிகேஷன். கொஞ்சம் படித்துவிட்டு 60 மார்க் வாங்கும் சுமாரான மாணவன் நான். 100 மார்க் வாங்க வேண்டுமென நினைத்ததில்லை. 60 மார்க் வாங்கினால் போதுமென நினைப்பவன் என கலகலப்பாக பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

SCROLL FOR NEXT