செய்திகள்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமையல் கலைஞராகவும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி மூலமாகவும் பிரபலமானவர் வெங்கடேஷ் பட்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக வெங்கடேஷ் பட் விடியோ வெளியிட்டு அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, கிட்டதட்ட 25 ஆண்டுகளாக விஜய் டிவியின் ஒரு அங்கமாக இருந்த மீடியா மேசன்ஸ் தயாரிப்பு நிறுவனம் விஜய் டிவியில் இருந்தே விலகுவதாக அந்நிறுவனத்தின் முக்கிய நபரான ரைவ்ஃபா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மீடியா மேசன்ஸ் நிறுவனமும், வெங்கடேஷ் பட்டும் இணைந்து சன் தொலைக்காட்சியில் இணைந்து புதிய சமையல் நிகழ்ச்சியை தொடங்கவுள்ளனர்.

இந்நிலையில், வெங்கடேஷ் பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இன்று(ஏப். 28) காலை 8 மணியிலிருந்து உங்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

நேற்று(ஏப்ரல் 27) குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், அந்நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் தொலைக்காட்சியில் புதிய சமையல் நிகழ்ச்சி தொடங்கவுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்கா வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT