DOTCOM
செய்திகள்

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

பாடகர் பரத், ஜி.பி.முத்து, மோனிஷா, தீனா உள்ளிட்டோர் ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளனர்.

DIN

சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் நடுவராக பங்கேற்கும் ’டாப் குக் டூப் குக்கு’ என்ற சமையல் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ 5-வது சீசனில் இருந்து விலகுவதாக செஃப் வெங்கடேஷ் பட் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சி உள்ளிட்ட விஜய் தொலைக்காட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வந்த மீடியா மேசன்ஸ் தயாரிப்பு நிறுவனமும் அந்த தொலைக்காட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தது.

தற்போது குக் வித் கோமாளி 5-வது சீசனின் நடுவராக சமையல் கலைஞர் தாமுவுடன் நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் செயல்பட்டு வருகிறார்.

கடந்த வாரம் தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் பழைய கோமாளிகள் குரேஷி, புகழ், சுனிதா உள்ளிட்டோர் தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், மீடியா மேசன்ஸ் நிறுவனமும் சன் தொலைக்காட்சியும் இணைந்து தயாரிக்கும் ‘டாப் குக் டூப் குக்கு’ என்ற புதிய சமையல் நிகழ்ச்சிக்கான ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.

இதில், நடுவராக வெங்கடேஷ் பட் செயல்படவுள்ளார். டூப் குக்குகளாக விஜய் டிவி மூலம் பிரபலமான பரத், தீனா, தீபா, மோனிஷா, ஜி.பி.முத்து உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், மற்றொரு நடுவர், குக்குகள், நிகழ்ச்சி ஒளிபரப்பு தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியின் முக்கிய பிரபலங்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மொஹல்லா மருத்துவமனையில் தீ விபத்து

தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை வியப்பளிக்கிறது: பிரதமா் மோடி

ரயில் நிலையங்களில் பெண்களை குறிவைத்து கொள்ளை: 5 பெண்கள் கைது

கடந்த 5 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 64.86 கோடி நலத்திட்ட உதவி

இந்தியாவில் 72,000 வெளிநாட்டு மாணவா்கள்: நிலங்களவையில் தகவல் அரசு தகவல்

SCROLL FOR NEXT