ஓடிடியில் த்ரிஷாவின் பிருந்தா!
நடிகை த்ரிஷா நடிப்பில் உருவான பிருந்தா இணையத் தொடர் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன், லியோ திரைப்படங்களின் மூலம் மீண்டும் பார்முக்கு வந்துள்ளார் த்ரிஷா. தற்போது, அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
அதேநேரம், இயக்குநர் சூர்யா மனோஜ் வங்கலா இயக்கத்தில் கிரைம் திரில்லர் கதையாக உருவான பிருந்தா என்கிற இணையத் தொடரிலும் கதை நாயகியாக நடித்துள்ளார். இதில், இந்திரஜித் சுகுமாரன், ஜெயப்பிரகாஷ், அமானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இத்தொடர் சோனி லைவ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. இதில், த்ரிஷா காவல்துறை உதவி ஆய்வாளராக நடித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.