விடுதலை, கருடன் ஆகிய படங்களிலிருந்து கொட்டுக்காளி திரைப்படம் மாறுபட்டதாக இருக்கும் என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
மேலும், கொட்டுக்காளி திரைப்படம் உண்மைக்கு மிக நெருக்கமான படம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூரி,
''என்னுடைய முந்தைய படங்களான விடுதலை, கருடனிலிருந்து முற்றிலும் வேறுப்பட்ட திரைப்படமாக கொட்டுக்காளி இருக்கும். இது திரையரங்குகளுக்கான மெயின் ஸ்டீம் கதையம்சம் கொண்ட திரைப்படம். உண்மைக்கு மிக நெருக்கமான படம்.
இதில் தான் நடித்துள்ள பாண்டி என்கிற கதாபாத்திரம் எல்லா குடும்பங்ளிலும் இருக்கும் ஒருவன் தான். இந்த சமூகம் சொல்லிக்கொடுத்த உறவு முறைகளையும், நம்பிக்கைகளையும் பெரிதும் நம்புகிற ஒரு கதாபாத்திரம் தான் பாண்டி.
இந்த படத்தில் வரும் பயணத்தில், இந்த சமூகம் உருவாக்குன பாண்டிக்கும், பாண்டி என்கிற தனிப்பட்ட ஒருவனுக்கும் நடக்குற மன போராட்டத்த சரியா பிரதிபலிக்கனும்னு ரொம்ப கவனமா இருந்தேன்.
அதை சரியாவும் பண்ணி இருக்கேன்னு நம்புறேன். நீங்க அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படமாக கொட்டுக்காளி நிச்சயம் இருக்கும்'' என சூரி பதிவிட்டுள்ளார்.
கூழாங்கல் படத்தை அடுத்து பி.எஸ்.வினோத் ராஜ் கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகர் சூரியுடன் மலையாள நடிகை அன்னா பென் நடித்துள்ளார். நடிகர் சிவகார்த்தியேன் தயாரித்துள்ள இந்தப் படம் ஆக.23-ம் தேதி வெளியாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.