ஓடிடியில் வெளியான நயன்தாராவின் புதிய படம்!
நயன்தாராவின் மன ஷங்கர வரபிரசாத காரு திரைப்படம் ஓடிடியில் வெளியானது.
நடிகர் சிரஞ்சீவி மற்றும் நடிகை நயன்தாரா நடித்துள்ள மன ஷங்கர வரபிரசாத காரு திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்தப் படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். ஷைனி ஸ்கீரின்ஸ் அன்ட் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
பொங்கலை முன்னிட்டு இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் கடந்த ஜன.12ஆம் தேதி வெளியானது. அதிரடி கலந்த நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்ட இந்தப் படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
Advertisement
Advertisement
இப்படத்தில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நயன்தாரா மற்றும் கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் உதித் நாராயணன், ஸ்வேதா மோகன் பாடிய மீசாலா பிள்ள எனும் பாடலின் லிரிக்கல் விடியோ 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளைக் கடந்து சாதனைப் படைத்தது.
குடும்ப பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள மன ஷங்கர வரபிரசாத காரு திரைப்படம் இன்று (பிப்.12) ஜீ5 தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 7 மொழிகளில் வெளியாகியுள்ளது.
The film Mana Shankara Varaprisada Kaaru, starring actor Chiranjeevi and actress Nayanthara, has been released on the OTT platform and is attracting the attention of fans.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.