நயன்தாரா பிறந்த நாள்... தர்மன் சிறப்பு போஸ்டர்!
நயன்தாரா பிறந்த நாள் போஸ்டர்...
நடிகை நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு தர்மன் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழின் முன்னணி நடிகையான நயன்தாரா ஆண்டிற்கு 3 படங்களிலாவது நடித்துவிடுகிறார். அதில், உச்ச நட்சத்திர நடிகர்கள் படங்களும் அடக்கம். தயாரிப்பாளராகவும் தொழிலதிபராகவும் இயங்கி வருகிறார்.
Advertisement
Advertisement
தமிழைத் தாண்டி இந்தியளவிலும் பெரிய படங்களில் நாயகியாக நடிக்க நயன்தாராவுக்கு வாய்ப்புகள் அமைகின்றன. தற்போது, சல்மான் கானுக்கு ஜோடியாக பாலிவுட் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இறுதியாக, நயன் நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படம் விமர்சன ரீதியாகத் தோல்விப்படமானது.
இந்த நிலையில், நடிகை நயன்தாராவின் 42-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், நயன்தாரா நடிகர் ரஜினிகாந்த்துடன் நடித்து வரும் தர்மன் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.