ரஜினியின் தர்மன் திரைப்படத்தின் அடுத்த அப்டேட்!
தர்மன் திரைப்படத்தில் நடிக்கும் நடிகை பற்றிய அப்டேட் நாளை வெளியாகவுள்ளது.
தர்மன் திரைப்படத்தில் நடிக்கும் நடிகை பற்றிய அடுத்த அப்டேட் நாளை வெளியாகவுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதுவரை ரூ. 800 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள நிலையில், தமிழின் உச்ச நட்சத்திரமாக தன்னை மீண்டும் ரஜினி நிரூபித்துள்ளதாக சினிமா ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
Advertisement
Advertisement
இப்படத்தில் சிம்ரன், ராஷி கன்னா, நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களின் நடிக்கின்றனர். ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகிவரும் இப்படத்தில் ரஜினி மருத்துவராக நடிக்கிறார். இது, படையப்பா மற்றும் வேட்டையாடு விளையாடு கலவையாக இருக்கும் என இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார். இதுவரை மூன்று கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளன.
இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா நடித்துள்ளதாகச் செய்திகள் வெளியான நிலையில், அதற்கான அப்டேட் நாளை வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. அதுதொடர்பான, ப்ரோமோ விடியோவை இன்று வெளியிட்டுள்ளனர்.
The next update on Rajini's film 'Dharman'!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.