தர்மன் அடுத்த அப்டேட் எப்போது தெரியுமா?
தர்மன் திரைப்படத்தின் அப்டேட்....
நடிகர் ரஜினிகாந்த்தின் தர்மன் திரைப்படத்தின் அடுத்த அப்டேட் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதுவரை ரூ. 800 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள நிலையில், தமிழின் உச்ச நட்சத்திரமாக தன்னை மீண்டும் ரஜினி நிரூபித்துள்ளதாக சினிமா ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஸ்ரீலீலா, சிம்ரன், ராஷி கன்னா, நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இதில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி இணைந்துள்ளதை புரோமோ வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படம் மூலம் ராம் பொத்தினேனி தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகவுள்ளதால் அவரின் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்த நிலையில், தர்மன் திரைப்படத்தின் புதிய அப்டேட் நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளான டிச. 12 ஆம் தேதி வெளியாகும் என இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து அறிவித்துள்ளார். அன்று தர்மன் திரைப்படத்தின் டீசர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.