முகப்பு
செய்திகள்

வெப் தொடரில் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக தனது கவனத்தை வெப் தொடர் பக்கம் செலுத்தியுள்ளார்.

Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 12:23 PM
விஜய்சேதுபதி(கோப்புப்படம்)
பகிர்:

நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக தனது கவனத்தை வெப் தொடர் பக்கம் செலுத்தியுள்ளார்.

விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா ஜூன் 12 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு இது ஒரு ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் மற்றும் சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

படத்துக்கு அஜ்னீஷ் லோக்நாத் இசையமைத்திருந்தார். கடந்த காலங்களில் விஜய் சேதுபதியின் எந்த படமும் தொடாத வசூல் சாதனையை மகாராஜா செய்துள்ளது. இந்த படம் திரையரங்குகள் மூலமாக மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிலை ஈட்டியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, நெட்பிளிக்ஸ் ஓடிடி வெளியான மகாராஜா படம் பாலிவுட் மற்றும் வெளிநாட்டு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது.

இதற்கிடையே, விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘ஏஸ்’ திரைப்படம் திரைக்கு வருகிறது. அடுத்ததாக விஜய் சேதுபதி எந்த இயக்குநருடன் இணைய உள்ளார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்தது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி தன் கவனத்தை வெப் தொடர் பக்கம் செலுத்தியுள்ளார்.

டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி நிறுவனம் தயாரிக்கும் இந்த வெப் தொடருக்கு முத்து என்கிற காட்டான் எனும் தலைப்பு வைத்துள்ளனர். இதில் விஜய் சேதுபதியுடன் இணைந்து குட் நைட் பட புகழ் மணிகண்டனும் நடிக்கவுள்ளார்.

கிராமத்து பின்னணியில் ஆக்சன் பாணியில் இந்த வெப் தொடர் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →