நிஜ பின்னணியில் தடயம்
சமுத்திரக்கனி நடிப்பில் ஜீ 5 தளத்தில் வெளியாகியுள்ள வெப் தொடர் 'தடயம்'. நவீன்குமார் பழனிவேல் இயக்கிய இந்த வெப் தொடரை, அஜய் கிருஷ்ணா தயாரித்துள்ளார்.
சமுத்திரக்கனி நடிப்பில் ஜீ 5 தளத்தில் வெளியாகியுள்ள வெப் தொடர் 'தடயம்'. நவீன்குமார் பழனிவேல் இயக்கிய இந்த வெப் தொடரை, அஜய் கிருஷ்ணா தயாரித்துள்ளார். 1990-களில் திருத்தணியையொட்டி தமிழக } ஆந்திர எல்லையோரக் கிராமங்களில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.
எல்லையோரக் கிராமங்களில் நடு இரவில் நிகழ்ந்த தொடர் கொலைகள், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பயத்தையும், பதிலற்ற கேள்விகளையும், மர்மத்தையும் உருவாக்கின. பணம், நகை, கொள்ளை போகவில்லை என்றாலும், ஒவ்வொரு வீட்டிலும் கணவரின் அரைஞாண் கயிறும், மனைவியின் தாலியும் மட்டும் திருடப்பட்டிருந்தன. அதன் பின்னணியில் இந்த வெப் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.
அதிகாரத்தின் முன்னால் எளிய மக்களின் வாழ்க்கை என்பது எவ்வாறு நசுக்கப்படுகிறது என்பதை மையமாகக் கொண்டு இதன் கதைக் கரு உருவாக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அரசியல், அதிகாரத்தின் விலங்குகளிலிருந்து எளிய மக்களால் தப்பிக்கவே முடியாது என்பதை விவரிக்கிறது திரைக்கதை. தகவல் தொழில்நுட்பங்கள் இல்லாத 1990-களில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லி, இந்தத் தொடர் மனதை நெகிழ வைக்கும் விதமாக உள்ளது.
சமுத்திரக்கனி போலீஸ் உதவி ஆய்வாளராக நடித்துள்ளார். ஷிவதா இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார். மூணாறு ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 1990-களின் இறுதியில் கிராமப்புறப் பின்னணியில் மிகவும் எதார்த்த களத்தில் உருவாக்கப்பட்ட இத்தொடர் கடந்த 27-ஆம் தேதி ஜீ 5 தளத்தில் வெளியாகியுள்ளது.