மார்ட்டின் டிரைலர்!
நடிகர் துருவா சர்ஜா நடிப்பில் உருவான மார்ட்டின் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஏ.பி. அர்ஜுன் இயக்கத்தில் தயாராகும் புதிய படம் 'மார்ட்டின்'. இதில் துருவா சர்ஜா நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார்.
பெரிய பொருள் செலவில் பிரம்மாண்ட சண்டைக் காட்சிகளால் இப்படம் உருவாகியுள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவான இது வருகிற அக்டோபர் 11 ஆம் தேதி இந்திய மொழிகள் மட்டுமல்லாது கொரியன், ஜாப்பான், ஸ்பானிஷ் மற்றும் ரஷிய மொழிகளிலும் நேரடியாக வெளியாகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.