முகப்பு
செய்திகள்

கேம் சேஞ்சர் டப்பிங் பணிகள் துவக்கம்!

Updated On : 7 ஆகஸ்ட், 2024 at 1:38 PM
பகிர்:

நடிகர் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன.

இயக்குநர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ படத்தினை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோருடன் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார். 

இந்தியன் 2 வெளியானதைத் தொடர்ந்து ஷங்கர், ராம் சரண் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement

இப்படத்தில் ராம் சரணுக்கான படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதனைத் தெரிவிக்கும் விதமாக, முதல்நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது புகைப்படத்தையும் இறுதிநாளின் புகைப்படத்தையும் ராம் சரண் பகிர்ந்திருந்தார்.

தில் ராஜூ (நீல சட்டை) மற்றும் டப்பிங் குழுவினர்.

இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, கேம் சேஞ்சர் படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளதை தெரிவித்துள்ளார்.

இப்படத்தை இந்தாண்டு கிறிஸ்துமஸ் வெளியீடாக திரைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.