பார்த்திபா / திவ்யா / தாரணி இன்ஸ்டாகிராம்
செய்திகள்

மகாநதி தொடரில் மாறிய 3வது நடிகை! திவ்யாவுக்கு பதில் தாரணி!

முக்கியமான பாத்திரத்தில் நடிப்பவர்கள் அடிக்கடி மாறுவதால் ரசிகர்கள் ஏமாற்றம்.

DIN

மகாநதி தொடரில் கங்கா என்ற முதன்மை பாத்திரத்தில் நடிகை தாரணி நடிக்கவுள்ளார்.

இந்த பாத்திரத்தில் நடித்துவந்த நடிகை திவ்யா, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால், அவர் மகாநதி தொடரிலிருந்து விலகுவதாக நேற்று (ஆக. 6) அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து மகாநதி தொடரின் புதிய நாயகியாக தாரணி ஒப்பந்தமாகியுள்ளார். அவர் இனி கங்கா பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

திவ்யாவுக்கு முன்பு கங்கா பாத்திரத்தில் நடிகை பார்த்திபா நடித்து வந்தார். அவருக்கு மலையாளத் திரைப்படங்களில் நாயகியாக நடிக்க கிடைத்த வாய்ப்பைத் தொடர்ந்து, மகாநதி தொடரிலிருந்து விலகினார்.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு மகாநதி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரை இயக்குநர் ப்ரவீன் பென்னெட் இயக்குகிறார்.

தந்தையை இழந்த 4 சகோதரிகள், தாயின் துணையோடு சமூகத்தின் சவால்களை சந்தித்து தங்களின் இலக்குகளை அடைவதே மகாநதி தொடரின் மையக்கதை.

மகாநதி போஸ்டர்

காவேரி, கங்கா, யமுனா, நர்மதா என ஆறுகளின் பெயர்களை சுமந்த சகோதரிகள் 4 பேரில் கங்கா என்பவரே கதையின் நாயகி. இந்த பாத்திரத்தில் பார்த்திபா நடித்து வந்தார். அவருக்கு அடுத்தபடியாக திவ்யா நடித்துவந்தார். அவரும் விலகியதால், தற்போது கங்கா பாத்திரத்தில் தாரணி நடிக்கவுள்ளார்.

முக்கியமான பாத்திரத்தில் நடிப்பவர்கள் அடிக்கடி மாறுவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கதையின் சுவாரஸியத்தை இது கெடுப்பதாகவும் மகாநதி ரசிகர்கள் பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திவ்யா (உள்படம்)

விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற பாத்திரத்தில் நடித்தவர்களும், அடிக்கடி மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, டெங்கு காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நடிகை திவ்யா கணேஷ், தன்னால் படப்பிடிப்புக்குச் செல்ல இயலாததற்கு வருத்தம் தெரிவித்து பதிவிட்டிருந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படத்தைப் பகிர்ந்து, அவர் பதிவிட்டிருந்ததாவது,

''டெங்குவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாள்களாக மருத்துவமனையில் இருப்பதால் மகாநதி படப்பிடிப்புக்கு செல்ல முடியவில்லை என்பதற்காக வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய இந்த நிலை, அப்பாத்திரத்தில் நடிக்க வேறு நபரைத் தேட வேண்டிய நிலையை என் குழுவுக்கு ஏற்படுத்தும். மகாநதியில் கங்கா பாத்திரத்தில் தொடர்ந்து நடிக்க முடியாததற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கங்காவுக்கு அளித்த ஆதரவுக்கு நன்றிகள். உங்களை மீண்டும் சந்திப்பேன் என நம்புகிறேன்'' எனப் பதிவிட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரெப்கோ வங்கியில் மார்க்கெட்டிங் அசோசியேட் பணிகள்

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

SCROLL FOR NEXT