செய்திகள்

ராயன் மேக்கிங் விடியோ!

DIN

ராயன் திரைப்படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த ராயன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அதேநேரம், சில சண்டைக்காட்சிகள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதால், படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்தது.

இப்படம், உலகளவில் ரூ.120 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாகவும் தமிழகத்தில் மட்டும் ரூ.60 கோடியைத் தாண்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவே, நடிகர் தனுஷ் நடித்த படங்களிலேயே பெரிய வசூலைப் பெற்றிருக்கிறது. மேலும், தமிழ் சினிமாவில் 50-வது படம் எந்த நடிகருக்கும் சரியாக அமையாது என்கிற எண்ணம் உண்டு. இதை, நடிகர் அஜித்குமார் மங்காத்தா படத்திலும் விஜய் சேதுபதி மகாராஜா படத்திலும் முறியடித்தனர்.

ராயன் படப்பிடிப்பில்...

தனுஷும் 50-வது படத்தில் வெற்றி பெற்றிருப்பது அவருக்கும் அவரின் ரசிகர்களுக்கும் உற்சாகத்தை அளித்துள்ளது.

தற்போது, படத்தின் உருவாக்க விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது, ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT