படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவுக்கு தலையில் காயம்?
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் சூர்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் துவங்கி முடிந்தது.
இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
சூர்யாவின் பிறந்த நாளான இன்று சூர்யா - 44 படத்தின் கிளிம்ஸ் விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. சிகரெட் புகைத்தபடி, சூர்யா நடந்து வரும் காட்சி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
தற்போது ஊட்டியில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பின்போது நடிகர் சூர்யாவுக்கு தலையில் அடிப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூர்யாவுக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்தப் படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இதில் ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன் ஜெயம் ராம் உள்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்திற்கு பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. சூர்யா கங்குவா படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.