3 மொழிகளில் வெளியாகும் தமன்னாவின் புதிய பாடல்!
நடிகை தமன்னா, ஜான் ஆப்ரகாம் நடிப்பில் உருவாகியுள்ள வேதா படத்தின் புதிய பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார் தமன்னா. ரஜினிகாந்த்துடன் இணைந்து 'ஜெயிலர்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அனைவரையும் கவர்ந்தார்.
தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.
சமீபத்தில் அவரது பப்ளி பவுன்சர், லஸ்ட் ஸ்டோரிஸ் 2 போன்ற படங்கள் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றன.
Advertisement
Advertisement
தமிழில் 'அரண்மனை 4' படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இன்னும் 2 ஹிந்திப் படங்கள், ஒரு தெலுங்குப் படமான ‘ஒடேலா 2’ படத்தில் நடித்து வருகிறார்.
காவாலா பாடலுக்குப் பிறகு, ஸ்ட்ரீ - 2 (stree - 2) என்கிற ஹிந்தி படத்தில் ஆஜ் கி ராத் (Aaj Ki Raat) என்ற பாடலுக்கு தமன்னா நடனமாடியது சமீபத்தில் வைரலானது.
ஜான் ஆப்ரகாம், ஹிந்தி நடிகை சர்வாரி ஆகியோருடன் தமன்னா நடித்துள்ள வேதா திரைப்படம் வரும் ஆக.15 வெளியாக உள்ளது. இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.
இந்நிலையில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் இந்தப் பாடல் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தின் டிரைலர் 40 மில்லியன் (4 கோடி) பார்வைகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.