செய்திகள்

நாக சைதன்யா - சோபிதா துலிபாலா பிரிவார்கள்... சர்ச்சையில் ஜோதிடர்!

DIN

நாக சைதன்யா - சோபிதா திருமண உறவு நிலைக்காது எனக் கூறிய ஜோதிடருக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2021-ல் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சோபிதா துலிபாலாவும் நாக சைதன்யாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின.

இருவரும் தங்களின் காதலை விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருவரும் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். அடுத்தாண்டு திருமணம் செய்துகொள்வார்கள் எனத் தெரிகிறது.

இந்த இணைக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆந்திரத்தைச் சேர்ந்த ஜோதிடர் வேணு சுவாமி என்பவர், “நாக சைதன்யாவும் சோபிதா துலிபாலாவும் திருமணம் செய்துகொண்டாலும் சில ஆண்டுகளில் பிரிந்துவிடுவார்கள். அது, இன்னொரு பெண்ணால்தான் நிகழும்.” எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

நாக சைதன்யா - சோபிதா துலிபாலா.

இதனைத் தொடர்ந்து, அந்த ஜோதிடரைப் பலரும் கண்டித்து, தாக்கி பேசிவந்தனர். மேலும், தெலுங்கு திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் காவல்துறையில் இவர் மீது புகார் அளித்தது.

இதனால், வேணு சுவாமி மன்னிப்பு கேட்டு விடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “நான் ஜோசியத்தை கணித்துதான் சொன்னேன். யாரின் மனதையும் புண்படுத்தும் நோக்கில் கூறவில்லை. இனி நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ஜோதிட கணிப்பை பொதுவெளியில் பகிரமாட்டேன்” என விளக்கமளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிபிஎல்: முதல் அரைசதத்தை பதிவுசெய்த பாபர் அசாம்!

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த ஹார்திக் பாண்டியா!

கோவையில் போட்டியா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

SCROLL FOR NEXT