செய்திகள்

கோலி சோடா ரைசிங்... விஜய் மில்டனின் புதிய தொடர்!

DIN

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் புதிய இணையத் தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கோலி சோடா. சந்தையில் மூட்டை தூக்கும் 4 சிறுவர்கள் தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கும் கதையாக வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

தொடர்ந்து, கோலி சோடா - 2 தயாரானது. ஆனால், அப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இந்த நிலையில், இயக்குநர் விஜய் மில்டன் கோலி சோடா ரைசிங் என்கிற இணையத் தொடரை இயக்கியுள்ளார்.

இதில் நடிகர்கள் சேரன், ஷ்யாம், அபிராமி, அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆக்சன், திரில்லர் பாணியில் உருவாகியிருப்பதாகத் தெரிகிறது.

ஹாட் ஸ்டார் ஓடிடியில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளில் விரைவில் இத்தொடர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹமாஸால் சிறைப்பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகள் அனைவரும் விடுவிப்பு: இஸ்ரேல் ராணுவம்

பிக் பாஸை விமர்சிப்பதால் எந்தப் பலனும் இல்லை: விஜய் சேதுபதி எச்சரிக்கை

தீபாவளி பார்ட்டி... சாயிஷா!

இசை மழை... ஸ்ரேயா கோஷல்!

நாகை மீனவர்கள் 19 பேர் மீது தாக்குதல்!

SCROLL FOR NEXT