ஜெனிஃபர் லோபஸ் படம்: வெரைட்டி
செய்திகள்

4 ஆவது கணவரையும் விவாகரத்து செய்த ஜெனிஃபர் லோபஸ்!

பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லோபஸ் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.

DIN

ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளுல் ஒருவராக இருப்பவர் ஜெனிஃபர் லோபஸ். 55 வயதாகும் ஜெனிஃபர் லோபஸ் 1986 முதல் நடித்து வருகிறார்.

40 ஆண்டுகளாக நடித்து வரும் இவர் ஒரு படத்துக்கு 20 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.167 கோடி) சம்பளமாக வாங்குகிறார்.

ஜெனிஃபர் லோபஸ்

நடிப்பு மட்டுமல்லாமல் நடனதுக்கும் பிரபலமானவர் ஜெனிஃபர் லோபஸ். இசையில் லத்தீன் அமெரிக்க பாப் கலாச்சாரத்தை புகுத்தியதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

தனது 4ஆவது கணவர் பென் அப்ஃளெக்கை விவாகரத்து செய்ய விண்ணப்பித்துள்ளார். 1997இல் ஜானி நோவாவுடன் திருமணம் செய்து 1998ல் விவாகரத்து செய்தார். பின்னர் கிறிஸ் ஜூட் உடனும் (2001- 2003), மார்க் ஆண்டணி (2004-2014) உடன் விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

ஜெனிஃபர் லோபஸ்-பென் அப்ஃளெக்

பிரபல நடிகரும் இயக்குநருமான பென் அப்ஃளெக்கை கடந்த 2022இல் திருமணம் செய்தார். சிறிது காலமாகவே (ஏப்.26 முதல்) பிரிந்து வாழ்வதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது இது உறுதியாகியுள்ளது.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான அட்லஸ் வசூலில் கலக்கியது.

தற்போது ஜெனிஃபர் லோபஸ் நடிப்பில் அன்ஸ்டாபபள், கிஸ் ஆஃப் தி ஸ்பைடர் வுமன் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்கத்தா: இளம் பெண்ணை வீட்டிலிருந்து கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள்!

அன்பும் நன்றியும்... மம்மூட்டி பகிர்ந்த பதிவு!

அதிமுகவில் பதவியை ராஜிநாமா செய்கிறேன்: முன்னாள் எம்.பி. சத்தியபாமா

செங்கோட்டையனை விரைவில் சந்திப்பேன்: ஓ. பன்னீர்செல்வம்

மரக்கடையில் திடீர் தீவிபத்து! தேக்கு மரங்கள் எரிந்து நாசம்! | Vaniyambadi

SCROLL FOR NEXT