செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்ட முதல் தமிழ்ப்படம்... மகாராஜா சாதனை!

DIN

நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் ஓடிடி வெளியீட்டில் சாதனை படைத்துள்ளது.

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

திரையரங்க வெளியீட்டிலேயே இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படமானது.

தொடர்ந்து, மகாராஜா திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ஜூலை 12 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியானது.

ஓடிடி வெளியீட்டிலும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, கிளைமேக்ஸ் காட்சிகள் பலரையும் பாதித்தது சமூக வலைதள விமர்சங்களில் காண முடிந்தது.

இந்த நிலையில், நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தாண்டு வெளியான இந்தியப் படங்களிலேயே அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் மகாராஜா 1.86 கோடி பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.

க்ரூ (crew - 1.78 கோடி), லாப்தா லேடீஸ் (1.71 கோடி), சைத்தான் (1.48 கோடி), ஃபைட்டர் (1.4 கோடி), அனிமல் (1.36 கோடி), மஹாராஜ் (1.16 கோடி), டங்கி (1.08 கோடி), பக்‌ஷக் (1.04 கோடி), பாடே மியான் சோட்டே மியான் (96 லட்சம்) ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட முதல் தமிழ்ப் படம் என்கிற சாதனையை மகாராஜா படைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT