முகப்பு
செய்திகள்

பிசாசு - 2 எப்போது? மிஷ்கின் பதில்!

Updated On : 22 ஆகஸ்ட், 2024 at 10:05 AM
நடிகை ஆண்ட்ரியா
பகிர்:

பிசாசு - 2 வெளியீடு குறித்து இயக்குநர் மிஷ்கின் பதிலளித்துள்ளார்.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு  வெளியான 'பிசாசு' திரைப்படம் பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்கான பேச்சவார்த்தை நடைபெற்று வந்தது.

பின் முழுக்கதையும் தயாரான பின்பு நடிகை ஆண்ட்ரியாவை நாயகியாக வைத்து பூர்ணா, சந்தோஷ் பிரதாப், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் பிசாசு - 2 திரைப்படத்தை இயக்கினார். ஆனால், இரண்டு ஆண்டுகளாக இப்படம் வெளியாகாமல் இருக்கிறது.

தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், இயக்குநர் மிஷ்கினிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “பிசாசு - 2 விரைவில் திரைக்கு வரும். ஆண்ட்ரியா மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். இப்படம் உங்கள் ஆன்மாவை தொடும் வகையில் உருவாகியுள்ளது. என் தயாரிப்பாளர் சிறிய பிரச்னையில் உள்ளார். படத்தில் முதலீடு செய்தவர்களுக்கே எப்போது வெளியாகும் எனத் தெரியும்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக,  இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஒருகாட்சியில் 15 நிமிடம் நிர்வாணமாக நடித்துள்ளதாக இயக்குநர் மிஷ்கின் கூறியிருந்தார். பின், அதை நீக்கிவிட்டதையும் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.