கருப்பு வெளியீட்டை மீண்டும் உறுதிசெய்த ஆர். ஜே. பாலாஜி!
கருப்பு வெளியீடு குறித்து ஆர்ஜே பாலாஜி...
கருப்பு திரைப்படத்தின் வெளியீடு குறித்து இயக்குநர் ஆர்ஜே பாலாஜி மீண்டும் பதிலளித்துள்ளார்.
இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த கருப்பு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தும் இன்னும் வெளியீடு காணாமல் இருக்கிறது.
காரணமாக, இன்னும் இப்படத்தின் ஓடிடி உரிமம் விற்கப்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகின. கருப்பு திரைப்படத்தை ஏப்ரல் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement
இப்படம் குறித்து அண்மையில் ஆர்ஜே பாலாஜி பேசியபோது, “கருப்பு திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. தேர்தல் முடிந்ததும் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம். படம் நன்றாக வந்திருக்கிறது. அனைவருக்குமான திரைப்படமாகவே இது உருவாகியுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
தற்போது, ரசிகர் ஒருவர் கருப்பு எப்போது திரைக்கு வரும் எனக் கேட்டதற்கு, ‘கோடையில்’ என மீண்டும் வெளியீட்டை ஆர்ஜே பாலாஜி உறுதிசெய்துள்ளார். இதனால், சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.