முகப்பு
செய்திகள்

சூர்யாவின் கருப்பு பட தெலுங்கு டைட்டில் அறிவிப்பு!

சூர்யாவின் கருப்பு படத்தின் தெலுங்கு டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 3 ஏப்ரல் 2026, 9:02 pm IST
பகிர்:

நடிகர் சூர்யா நாயகனாக நடித்துள்ள “கருப்பு” திரைப்படத்தின் தெலுங்கு டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஆர்ஜே பாலாஜி - நடிகர் சூர்யா கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியுள்ள திரைப்படம் “கருப்பு”. இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் இப்படம் உருவாகியுள்ளது.

நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்கும் இப்படத்தில் நடிகர்கள் த்ரிஷா, ஆர்ஜே பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படம் வரும் ஏப். 14 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தெலுங்கு மொழியில் வெளியாகும் இந்தப் படத்திற்கு “வீரபத்ருடு” எனப் பெயரிடப்பட்டுள்ளதாக, வெள்ளிக்கிழமை (ஏப். 3) அன்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஏற்கெனவே, கருப்பு திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், இப்படத்தின் “நாங்க நாலுபேரு” எனும் பாடலை பிரபல நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The Telugu title for the film "Karuppu," starring actor Suriya as the lead, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.