முகப்பு
செய்திகள்

கருப்பன் வரான்... வெளியான அப்டேட்! என்னவாக இருக்கும்?

கருப்பு குறித்து பதிவிட்ட ஆர்ஜே பாலாஜி...

Updated On : 16 மார்ச் 2026, 7:12 pm IST
பகிர்:

நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் அப்டேட்டை இயக்குநர் ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்.

நடிகர் சூர்யாவுக்கே இந்த நிலைமையா? என அவரின் ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு கடந்த ஆண்டே வெளியாக வேண்டிய கருப்பு ஒவ்வொரு மாதமாகத் தள்ளித், தள்ளி தற்போது மே வெளியீடாக திரைக்கு வருமென கூறப்படுகிறது.

இப்படத்தின் இயக்குநரான ஆர்ஜே பாலாஜியும் எப்போது வெளியாகும் என்கிற குழப்பத்தில் இருப்பது அவரின் பேச்சைக் கேட்டாலே தெரிகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இன்று சூர்யாவின் 46-வது படமான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து இயக்குநர் ஆர்ஜே பாலாஜி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அன்பான ரசிகர்களே அடுத்த திங்கள்கிழமை (மார்ச் 23) எனக் குறிப்பிட்டுள்ளார். இது, கருப்பு திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பாக இருக்கலாம் என்பதால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

summary

actor suriya's karuppu movie update given by director rj balaji

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments