நடிகை மேகா ஆகாஷுக்கு நிச்சயதார்த்தம்!
நடிகை மேகா ஆகாஷுக்கு சாய் விஷ்ணுவுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.
பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ்.
வந்தா ராஜாவதான் வருவேன், என்னை நோக்கி பாயும் தோட்டா, சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும், யாதும் ஊரே யாவரும் கேளிர், வடக்குபட்டி ராமசாமி என பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்துள்ள மேகா ஆகாஷின் சமீபத்திய மழை பிடிக்காத மனிதன் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
Advertisement
Advertisement
தற்போது தெலுங்கில் பெயரிடப்படாத இரண்டு படங்களில் பிசியாக நடித்துவருகிறார்.
இந்நிலையில் தனக்கு நடிகர் சாய் விஷ்ணுவுடன் நிச்சயதார்த்தம் முடிந்ததாக புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
இவர்கள் இருவரும் பேசினால் போதும் அன்பே என்ற குறும்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்த மேகா ஆகாஷுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.