கூலியில் இணைந்த உபேந்திரா!
நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படத்தில் நடிகர் உபேந்திரா இணைந்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
Advertisement
இதற்கிடையே, படத்தின் இந்தியளவு வணிகத்திற்காக பிற மொழி நட்சத்திர நடிகர்களை நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் முயன்று வருவதாகத் தகவல் வெளியானது.
முக்கியமாக, கூலி படத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் அவர் மறுத்ததாகவும் கூறப்பட்டது.
தற்போது, கூலி படத்தில் பிரபல கன்னட நடிகர் உப்பேந்திரா இணைந்துள்ளார்.
உபேந்திரா தமிழில் சத்யம் திரைப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.