ராக்காவில் ஃபெமினா ஜார்ஜ்?
ராக்கா திரைப்படம் குறித்து...
நடிகை ஃபெமினா ஜார்ஜ் ராக்கா திரைப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் அட்லி நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் ராக்கா திரைப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாயகிகளாக தீபிகா படுகோன், மிருணாள் தாக்குர் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
ஆச்சரியப்படும் வகையில் பான் உலகத் திரைப்படமாக ஆங்கிலம், கொரிய, சீன மொழிகளிலும் இப்படம் திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ராக்கா வணிக ரீதியாகவும் மிகப்பெரிய கவனம் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ராக்கா படத்திற்காக உலகின் முதன்மையான விஎஃப்எக்ஸ் நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன. ஒட்டுமொத்த படப்பிடிப்பும் மும்பையில் செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் பிரபல மலையாள நடிகை ஃபெமினா ஜார்ஜ் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஃபெமினா ஜார்ஜ் மின்னல் முரளி திரைப்படம் மூலம் அதிகம் கவனிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Reports have emerged that actress Femina George has joined the film Rakka
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.