முகப்பு
செய்திகள்

கோலி சோடா ரைசிங் டீசர்!

Updated On : 24 ஆகஸ்ட், 2024 at 2:59 PM
பகிர்:

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான கோலி சோடா ரைசிங் தொடரின் டீசர் வெளியாகியுள்ளது.

விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கோலி சோடா. சந்தையில் மூட்டை தூக்கும் 4 சிறுவர்கள் தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கும் கதையாக வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

தொடர்ந்து, கோலி சோடா - 2 தயாரானது. ஆனால், அப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

தற்போது, இயக்குநர் விஜய் மில்டன் கோலி சோடா ரைசிங் என்கிற இணையத் தொடரை இயக்கியுள்ளார்.

கோலி படத்தில் நடித்தவர்களுடன் நடிகர்கள் சேரன், ஷ்யாம், அபிராமி, அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆக்சன், திரில்லர் பாணியில் உருவாகியிருப்பதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், இதன் டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.