சூர்யா, ஸ்ரேயா. 
செய்திகள்

சூர்யாவுடன் நடனமாடிய ஸ்ரேயா!

சூர்யா - 44 படத்தின் தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் சூர்யாவின் படத்தில் நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனமாடியுள்ளதாகத் தகவல்.

நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44வது படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

சூர்யாவின் பிறந்த நாளின்போது இப்படத்தின் கிளிம்ஸ் விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. சிகரெட் புகைத்தபடி, சூர்யா நடந்து வரும் அந்தக் காட்சி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அந்தமானுக்குப் பின் ஊட்டியில் நடைபெற்று வந்த சூர்யா - 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இடுக்கியில் துவங்கியது.

இந்த நிலையில், ஊட்டியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது நடிகர் சூர்யா மற்றும் ஸ்ரேயா இணைந்து நடனமாடும் பாடல் காட்சிப்படுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரேயா சரண்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா. நடிகர்கள் ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் என நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். அதன்பின், மார்க்கெட் இழந்தவர் தற்போது மீண்டும் திரைப்படங்களுக்கு முயற்சித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை நம்பியவர் - ஆல்யா மானசா பகிர்ந்த படம்!

அமீபா தொற்றுக்கு பெண் பலி: அச்சத்தில் கேரள மக்கள்!

ரஜினியுடன் இணைந்து நடிப்பதை உறுதிப்படுத்திய கமல்!

ஆதாரை 12-வது ஆவணமாக ஏற்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

கவினின் கிஸ் படத்தின் டிரைலர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT