செய்திகள்

கங்குவா மறுவெளியீட்டுத் தேதி அறிவிப்பு எப்போது?

கங்குவா திரைப்படத்தின் வெளியீடு ஒத்திப்போவதாகத் தகவல்.

DIN

கங்குவா திரைப்படத்தின் மறுவெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றதால், சூர்யா - சிவா கூட்டணியில் உருவான கங்குவாவுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இப்படத்தை அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிடுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதற்காக, இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படமும் அக். 10 ஆம் தேதிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஜெயிலர் படத்திற்குப் பின் ரஜினி நடிக்கும் படமென்பதால், தமிழகத்தில் ரஜினியின் படத்தை வாங்கவே விநியோகிஸ்தர்கள் முயல்வார்கள். மேலும், இப்படத்தில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி என மொழிக்கு ஒரு நட்சத்திர நடிகரை வைத்திருப்பதால் பான் இந்தியளவில் வேட்டையன் படத்தின் வியாபாரமே ஓங்கும்.

அதேநேரம், பெரிய பட்ஜெட்டில் உருவான கங்குவா திரைப்படம் வெளியானால் இப்படமே பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் கங்குவா திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அக். 31 ஆம் தேதிக்கு மாற்ற தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், கங்குவாவின் அதிகாரப்பூர்வ மறுவெளியீட்டுத் தேதி இன்று அல்லது நாளை (செப்.1) அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாழ்வின் பாதை இவ்வுலகம்... கிருத்திகா காம்ரா!

கும்கி - 2 முதல் பாடல்!

விட்டாச்சு லீவு... அனுஷ்கா கௌசிக்!

உன்னைத் தேடி வருவேன்... நமீதா பிரமோத்!

பறக்கும்... நியதி பட்னானி!

SCROLL FOR NEXT