செய்திகள்

எம்புரான் படப்பிடிப்பு நிறைவு!

எம்புரான் அப்டேட்...

DIN

நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகும் எம்புரான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

லைகா தயாரிப்பில் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் எம்புரான் படத்தில் நடித்து வருகிறார். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இப்படத்திற்காக பல ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

லூசிஃபர் மிகப்பெரிய வெற்றிப்படமானது. அப்படத்தில், மோகன்லாலின் உதவியாளராக பிருத்விராஜ் சையத் மசூத் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

வெளிநாடுகளைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு பாலக்காட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், எம்புரான் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக பிருத்விராஜ் தெரிவித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு மார்ச் 27 ஆம் தேதி உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT