பிரபல கன்னட நடிகை தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னடத்தில் காலிப்பட்டா, மங்கலா கௌரி சின்னத்திரை தொடர்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் சோபிதா சிவாண்ணா (32). எரடொந்த்லா மூரு, ஜாக்பாட், ஏ.டி.எம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹாசனைச் சேர்ந்த இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிவாண்ணா என்பவரைத் திருமணம் செய்து ஹைதராபாத்துக்கு குடியேறியுள்ளார். அங்கிருந்தபடி நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: மீண்டும் இயக்குநராகும் எஸ். ஜே. சூர்யா!
இந்த நிலையில், நேற்று (டிச. 1) சோபிதா தன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். உடலைக் கைப்பற்றிய காவல்துறை வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணங்களை விசாரித்து வருகின்றனர்.
இளம் நடிகையான சோபிதா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.